ஒரு நொடிதான் என் காதல் வாழ்கிறது

அந்த கடலும் ஆழமில்லை
என் நேசம் நீ அளந்தால்
அந்த வானும் தூரமில்லை
என் காதலை நீ கடந்தால்

உருகும் மனநிலைதான்
உண்மை காதலென
ஆயிரம் கதை கேட்டு
அடிமனத்தால் காதல் கொண்டேன்

உயிரை துச்சமென
உனக்கென இழப்பதென்றால்
மறுநொடி நான் கொடுப்பேன்
நீ மறுத்தால் நான் இறப்பேன்

என்னை மறந்திட
உனக்கு ஆயிரம் வழி உண்டு
என்னை மறந்திட நினைக்கும்
ஒரு நொடிதான்
என் காதல் வாழ்கிறது

எழுதியவர் : ருத்ரன் (14-Oct-14, 6:58 pm)
பார்வை : 84

மேலே