பிஸ்கட் பாக்கெட்

அவர் ஒரு வங்கியின் மேலதிகாரி. அவர் ரயிலுக்காக காத்திருந்தார். ரயில் வரும் வரை பத்திரிகை படித்துகொண்டிருந்தார். பிஸ்கட் பாக்கெட் ஒன்றும் வைத்திருந்தார்.
அவர் அருகில் ஒரு சிறுவனும் அமர்ந்திருந்தான். அவர் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட , அந்த சிறுவனும் உரிமையோடு கையை விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டான்.
என்ன இங்கிதம் இல்லாமல் இப்படி இந்த பையனை வளர்த்திருக்கிறார்கள் இவன் பெற்றோர், என்று மனதுக்குள் நினைத்தார்.

மீண்டும் ஒரு பிஸ்கட் அவர் எடுக்க, அந்த பையனும் புன்னகைத்தபடியே மீண்டும் பிஸ்கட் எடுத்தான்.
ச்சே , என்ன பையன் இவன் என்று கோவப்பட்டார். அந்த சிறுவனும் புன்னகைத்தபடியே மீண்டும் எடுத்து சாப்பிட்டான்.

கடைசியில் ஒரு பிஸ்கட் மீதம் இருந்தது. அதை அந்த சிறுவன் இரண்டாக உடைத்து அவருக்கும் பாதி கொடுத்துவிட்டு தானும் புன்னகைத்தபடியே சாப்பிட்டான்.

என்ன சிறுவன் இவன்? என்று அவர் நினைக்கையிலேயே , அவர் செல்லவேண்டிய ரயிலும் வந்துவிட அவரது பை , செய்திதாள் எடுத்துகொண்டு ஏறினார்.

டிக்கெட் பரிசோதகர் வந்த போது டிக்கெட் எடுக்க பையை திறந்தார். அதனுள் ஒரு பிஸ்கட் பாக்கெட் உடைக்காமல் அப்படியே இருந்தது.

அப்படியானால் நான் சாபிட்டது அந்த சிறுவனின் பிஸ்கட்டா. அவன் சிரித்துகொண்டே இருந்தானே. நான் அவனை எவ்வளவு கேவலமாக நினைத்து விட்டேன் . நான் என்ன பெரிய மனிதன் என்று நினைத்தார்.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (30-Oct-14, 10:00 am)
Tanglish : biscuit paakket
பார்வை : 177

மேலே