நோபல் பரிசெல்லாம் நமக்கே
நூற்றுக்கு நூறு
கனவிலும் எட்டாத காலத்தில்
நோபல் பரிசு பெற்று
நாட்டின் பெருமையை
உயர்த்தினார் சர் சி. வி. இராமன்
இன்று எல்லாப் பாடங்களிலும்
நூற்றுக்கு நூறு பெறும்
அறிவுலக மேதைகள்
பேருந்து போக்குவரத்தும்
இல்லா சிற்றூர்ப் பள்ளிகளிலும்
வருங்காலம் நமக்குப் பொற்காலம்
அனைத்துலகும் பொறாமை கொள்ள
நோபல் பரிசனைத்தும் நமைத்தேடி வருவதை
ஆண்டவனே வந்தாலும் தடுத்திட முடியாது.