கண்ணீரில் நினைவலைகள்

விதைக்கப்பட்ட
பொன் விதைகள்
விருட்சம் ஆகும்
நாளுக்காய்
வீரன் வேந்தன்
எங்கள் தலைவன்
குறித்து வைத்த நாள்
மறைந்து விட்ட
மாவீரர்களை
நினைத்து பார்க்கும்
மாவீரர் நாள் .!

பொன்னோடு பொருள்
வேண்டாம்
விழியோடு ஓர் துளி நீர்
போதும்
மாண்டவர் மகிழ்வுபெற .!

ஏற்றுங்கள் ஓர் தீபம்
மாவீரர் கனவுகள்
மண்ணில் நிஜமாக.

இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு
"""வீர வணக்கம் """

எழுதியவர் : கயல்விழி (27-Nov-14, 7:15 am)
பார்வை : 319

மேலே