பெண் கூந்தலாக வேண்டும்
வரமொன்று தா பெண்ணே !
வளமாய் செழித்து நீண்டு
உன்மேனியில் படரும்
கூந்தலாய் நான் மாற...!
வனப்புடன் கரம் கோதி
வாசனை திரவியம் சூடி
வளர்த்திடும் அழகை கண்டு
வாசம் புக என் ஆசைகள் தவிக்குதடி!!
யாருக்கும் சந்தேகம் வராமல்
உன்தேகம் தழுவிட இது நல்வழியடி
உச்சியில் இருக்கும் வரை உச்சத்தில் நானடி !!
உன் மச்சத்தை மறைத்து காமஉச்சத்தை கூட்டுவேனடி...!
நான் மகிழ்ந்தால் நீ மகிழ்வாய்
நான் விழுந்தால் நீ அழுவாய்
அனுதினமும் என் நினைவாய் நீயடி
எனக்கு அது போதுமடி ...!!