என் சுடரொளி நீ

வளமான இரவுகள்
வறுமையாய்க் கழிகிறது
தனிமையின் வேதனைக்குத
துணையாய் உன் நினைவுகள்

கணப்பொழுதும் பிரிந்திடாக்
கழிப்பில் மகிழ்ந்து - என்
கற்பனைக்கும் எட்டிடா
சுவர்க்கத்தினைக் காட்டினாய்

தேயும் நிலவில்
பௌர்ணமி நிகழ்வாய்
கடந்திடும் நாட்களில்
சில நாட்களின் தரிசனம்

இவ்வுலகில் நான் கண்ட
சுடரொளி நீ
சுழலும் தினங்களை - உன்
நினைவுகளால் மாத்திரம்
சுகமாக்குகின்றேன்

நீயின்றிய இன்றய பொழுதுகளில்
சிற்றின்பமும் கசப்பாகி
அத்தனை இரவுகளும்
தனிமையில் தளர்கிறேன்

வேண்டும் நீ என்னோடு
வேதனைக்கெல்லாம் முற்றுப்புள்ளியாய்
வேறு வழியின்றிக் காத்திருக்கிறேன்
வரும் வரை விண்ணோடு

எழுதியவர் : (2-Jan-15, 11:17 pm)
Tanglish : en suderoli nee
பார்வை : 55

புதிய படைப்புகள்

மேலே