தலை கீழ் தீ

தலை கீழ் தீயாய்
தவம் செய்யும்
முக்கோண காட்டில்
நான்
இலை மறந்த
கடுங் காற்று.......

தொட்டும், விடாமலே
தொட்டும், விடாமலே
தொட தொட
கொழுந்து விட்டெரியும்,
கொழுந்து விட்டெறியும்.......

சுட்ட கள்
கொப்பளிக்கும்
நட்ட மரம் நடு நடுங்கி,
திட்டம் நீர் பிடிக்கும்.....
முக்கோண வட்டம்
வேர் பறிக்கும்.....

முளைத்தல் இடம் மாறும்
மூளையே தண்டு வடமாகும்....
இரைத்த கிணறூரும்...
மூச்சிரைக்க கனம் சேரும்....

சொல்ல சொல்ல
சொல்லி சொல்லி
கொத்தமல்லி
பத்தவில்லை....
பற்றிக் கொண்ட பாதியிலே
மீதிக் கதை எல்லை இல்லை....

நகம் கீறி
நளினம் சீறி
அதிகாலை
பனியோசை
உருமாறி இதழாகும்.....

மிச்சமாய் அச்சமின்றி
விடிந்தும் அறை கிறங்கும்......
உச்சமாய் பால்மயக்கம்
இடம் மாறி உறங்கும்.............

கவிஜி

எழுதியவர் : கவிஜி (3-Jan-15, 12:21 pm)
Tanglish : thalai keel thee
பார்வை : 1577

மேலே