வாழ்த்தவும் மனமில்லை வெறுக்கவும் முடியவில்லை 555

என்னுயிரே...

உன் விழி கண்டேன்
உன் பின்னால் வந்தேன்...

உன் முகம் கண்டேன்
முழுமதியை மறந்தேன்...

வளர்பிறையை போல
வளர்ந்தது தினம் நம் காதல்...

சில நாட்கள் மௌனம்...

அழைப்புகளுக்கும் குறுந்தகவல்களுக்கும்
பதிலேதும் இல்லாமல்...

காரணமின்றி நான்...

மீண்டும் உன்னை
சந்தித்தேன்...

மண்பார்த்து உதிர்த்தாய்
வேறொரு ஆடவனின் காதலென்று...

வளர்பிறையாய் வளர்ந்த போதே
சொல்லி இருக்கலாம்...

உண்மை காதலுக்கு
கிடைப்பதெல்லாம்...

வலி மட்டும் தானே...

உன்னை நேசித்த
எனக்கு...

வேறொரு பாவையை
நேசிக்க முடியுமா தெரியவில்லையடி...

உனக்காக துடித்த
இதய துடிப்பும்...

சுமையாக இன்று...

வேறொரு வஞ்சியை
சுமக்கவும் வலிமை இல்லை...

என் உண்மை
காதல் உனக்கு...?

உன்னை வாழ்த்தவும்
எனக்கு மனமில்லை...

வெறுக்கவும் என்னால்
முடியவில்லை...

என்னோடு நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Jan-15, 3:39 pm)
பார்வை : 463

மேலே