எனது கல்லூரி காலம்
புரிந்தும் புரியாத பாடங்கள்
சின்ன சின்ன குறும்புகள்
ரசிக்கவைக்கும் புனை பெயர்கள்
வெத்து வேட்டான பனிப்போர்கள்
பேசாத நாட்கள்
சலிக்காத குறுந்தகவல்கள்
எள்ளி நகையாடிய சீண்டல்கள்
வகுப்பில் தூங்கலாடும் முகங்கள்
சில நேர கண்ணீர் துளிகள்
பல நேர சிரிப்பு வெடிகள்
வியக்க வைத்த சில வெற்றிகள்
நிரந்திரமில்லாத சில தோல்விகள்
காற்றாய் பரவிய கிசு கிசுக்கள்
ஒற்றுமையை தூண்டிய தருணங்கள்
மனதில் நின்ற சில மனங்கள்
கண்ணில் பதிந்த சில முகங்கள்
இன்னும் நீளும் கதைகள்
இவை பிரிவை மறைக்கும் நினைவுகள்
இதம் பரப்பும் பௌர்ணமி நிலாக்கள்
பொலிவுடன் அனைத்து நெஞ்சங்களில்
நட்பை சுமக்கும் காலங்கள்...