உயிர் ஓவியங்கள்

கிளைகள் தோரும் கூடி குலவும் சிறு கிள்ளைகள்
சிறகடித்து சிதறும் சின்னஞ்சிறு சித்திரங்கள்
சிந்தனை சோகமெல்லாம் சிதறடிக்கும் செல்லங்கள்
ஓயாது கதை பேசும் குட்டி குட்டி குழ்ந்தைகள்
வண்ண வண்ண இயற்கை உயிரோவியங்கள் ;

கிளைகள் தோரும் கூடி பூக்கும் மலர் மொட்டுகள்
சிறு காற்றடித்தால் சிதறி விழும் சித்திரங்கள்
சிந்தனை சோகமெல்லாம் சிதறடிக்கும் மெல்லினங்கள்
ஓயாது மோன புன் சிரிக்கும் பூ இதழ்கள்
வண்ண வண்ண இயற்கை உயிரோவியங்கள் .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (21-Jan-15, 5:02 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
Tanglish : uyir oviyangal
பார்வை : 69

மேலே