இறந்தவன் பேசினால்
ஆம்..
அவன்தான் பேசினான்..
சற்றுமுன் இறந்தவன்..!
என் இறப்புக்கு அருகாமையில்..
நான் கண்டேன் ..
ஒரு மேகக் கூட்டம்
என்னை நோக்கி மெதுவாக
இறங்கி வருவதை..
அதுவரையிலும் நான்
பார்த்த உலகத்தின் காட்சிகளும்..
மனிதர்களும்..எல்லாமும் ..
மறைந்து..வெண்மேகக் கூட்டம்
மட்டும் தெரிய ..
இனிமேல் இந்த உலகில்
உனக்கு வேலையில்லை..
வா என்னோடு..
என்று ஒரு மாடு
சொல்லியபடி முன்னே சென்றது..
இனி நான் இந்த உலகத்தை
பார்க்கவே முடியாதா ..
அழுதேன் நான்..
ஆமாம் ..ஆனால்..
எந்த துன்பமோ..இன்பமோ
எதுவுமில்லாமல்..
உண்மையான ஆனந்தக் கடலுக்குத்தான்
வருகிறாய்..வா...என்றது அந்த மாடு..
..
பேசியவன் குரல்
யாருக்கும் கேட்கவில்லை !