ஆனந்த வலி
எப்போதாவது
காதலுக்கும் கண்ணுண்டு
நினைவுகளுடன் தழும்பும்
கண்ணீர் அலைவுகளில்
கிழித்தோடும் மீன்களென
வலிகள்....!
அன்பின் கைகளில்
அடிபட்ட செல்லப்பிராணியென
இதயம் வீங்கியிருந்தது
ஏமாற்றத்தின் நாடித்துடிப்பு....!
பசையுரிந்த போதும்
அழுக்குகளாய்த் துருத்தியபடி
போலிமுகமாய்ப்
பிரிந்திருந்தது - ஒட்டுறவு...!
சிலேடையாய்
விரும்பப்படுகின்றது மௌனம்
அதனதன் பொருளில்
தவறான ஒப்பீடென
விம்முகின்றது நடை ...!
தகுதியற்ற மண்ணில்
வேர்விட்ட விதியின் பயனாய்
கனவு மூடிக்
கலைக்கப்பட்டது காதல்....!