குறுங் கவிதை
பணி விலகலின் பொழுது
கிட்டத்தட்ட "தாலியாகவே" பாவிக்கப்பட்டு
கண்ணீருடன் கழற்றப்படுகிறது
உண்மையான
ஒவ்வொரு ஊழியனின் ID Card-உம்.
அந்த அமங்கள நிகழ்வில்,
அவர்களுக்கு
அத்தனை சடங்குகளையும் செய்யும்
வெட்டியானாக "நான்"
- மனிதவள மேலாளர்