வாழட்டும் வளர்பிறையும் வளமுடனே
குறுகுறு பார்வையோ கூறுகிறது
குறும்பட நாயகியோ இவளென்று !
சிதறிட்ட சிந்தனையோ சொல்கிறது
சிந்தையில் தோன்றிய சிலவற்றை !
அசையா விழிகளும் விவரிக்கிறது
அகிலத்தில் காணும் அவலங்களை !
அம்பெய்த விழிகளும் ஆயுத்தமோ
அரும்பும் அவனியிலே யுத்தமிட !
முத்தான முகமும் முழுமதியானதே
முத்துக்கள் கோர்த்த அணிகலனால் !
சுட்டியும் மாலையும் மயக்கிடுதே
சுற்றியுள்ள மனங்களும் மயங்கிடுதே !
அலங்கரித்த முகமிதனைக் கண்டால்
ஆர்ப்பரிக்கும் உள்ளங்கள் அமைதிபெறும் !
அப்பழுக்கிலா இவ்வழகியை நோக்கினால்
ஆர்ப்பாட்டம் செய்வோரும் அடங்கிடுவர் !
வளருகின்ற விருட்சம் இவளென்றும்
வழிகாட்டி வருங்கால தலைமுறைக்கு !
விரிந்திட்ட ஆலமரத்தின் விழுதுமிவள்
வாழட்டும் வளர்பிறையும் வளமுடனே !
பழனி குமார்