மழைக்கு முன்னால்...

ஜன்னல் வழியே ஒரு மாமரம்...
இலைக்கு நடுவே மாங்காய்கள்...

எதிர் வீட்டு மொட்டை மாடியில்-
இரண்டு புறாக்கள் எதையோ கொத்திக் கொண்டே நடந்து கொண்டு...
ஒன்றிரண்டு அணில்கள் அவற்றினூடே...
ஓடிக் கொண்டும் சாடிக் கொண்டும் ஒரே கொண்டாட்டமாய்...
இதைப் பார்த்துச் சிரிக்கும் பூந்தொட்டிப் பூக்கள்...
தூரத்தில் கட்டடப் பணியாளர்கள்...
மழை பெய்யவா என்று மோடமிடும் கருமேகங்கள்...
பின்னணி இசையாய் ஒரு ஏரோப்லேன் சத்தம்...
நடு நடுவே ஸ்கூட்டர், ஆட்டோ சத்தங்கள்...
இத்தனையும் ரசிக்கும் கணங்கள்
என் கண்களாய் இருக்க
ஏது துன்பம், ஏது துன்பம்..
இயற்கையோடு நானும் ஒருத்தியாய்...
இது தவிர வேறென்ன வேண்டும்?
என் மொட்டை மாடியில் என்ன நடக்கிறது?
பார்த்துவிட்டு பிறகு...


எழுதியவர் : shruthi (22-Apr-11, 4:53 pm)
சேர்த்தது : shruthi
Tanglish : mazhaikku maunnaal
பார்வை : 380

மேலே