அவலங்கலோர் அலசல்
வெண்டுறை
===================
காக்கையிடம் பிச்சைக் கேட்டே கழுகிடம்
கையேந்துவான் , காமப் பசித்தீர்க்க - அவள்
கட்டை வெந்தச் சாம்பலையும் அள்ளித்தின்பான்
அவனொரு பிணந் தின்னி ...
அவனால் பறிக்கப்பட்ட பிச்சைப் பாத்திரத்தை
ஆலயப் படியேறி தேடுகிறான் கையேந்திப்
பிச்சை வாங்கிய பாவ"கை"தனை கழுவிடவே
நாடுகிறான் புண்ணிய மாம் !
கருவாய் தெரித்ததைத் தவிர பாவமேதுமறியா
பிஞ்சு நெஞ்சங்கள் கையேந்திப் பிச்சைகேட்க
கடவுளானவன் பரதேசியாகிறான் ஏழையின்
சிரிப்பில் இறைவனைக் கணலாமாம் !
மூப்படந்ததை ஒட்டி பிள்ளைகளின் இதயவாசல்
அடைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது
மூதாட்டிக்கு முதியோர் இல்லத்திலே -நியூட்டனின்
மூன்றாம்விதி முடங்கிடு மோ !
அடகு கடையில் வைக்கப்பட்ட அன்பு
அநியாய வட்டியில் அழிவது ஆண்டவன்
கட்டளையா இல்லை கந்துவட்டி நெஞ்சம்
வறண்டதின் கை வரிசையா !
காலத்தை வெல்ல ஞாலமின்றி சுற்றும்
கயவர்களின் காய்ந்த நெஞ்சம் வறியவரை
வெல்லுமே ஒழிய! அந்தக்கால தேவனை
வென்றிட இயலு மோ !