மலர் மீது கவிஞன் பார்வை-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
அழகான மலர்களும் பெண்மைதான்
அதன் உடம்பில் மென்மை.
பூக்களுக்கும் பூச்சிகளுக்குமுள்ள
காதல்.ஆதலால் ஊறும் இனிக்கும்
தேன்கள்.நேசம் கண்டு வருத்தம்
கொண்ட பனிமழை.
நாட்கள் ஓட பூக்களின் மென்மை
சிறிதாய் அற்றுப்போக சோகக்காவியம்
எழுதும் பூக்காம்பு.அதனால் மனம் சோறும் சிட்டுக்கள்.
பூக்கள் கருக மீண்டும் அவ்விடத்தில்
காற்றில் இனப்பெருக்கம் செய்யும்
மகரந்தம்,சட்டென்று அதிகாலையில்
மலர்ந்த புத்தம் புதிய மலரை
பறித்து தலையில் சூடும் மங்கை.
வீட்டுத்தோட்டத்தில் மலர்ந்த பூவின்
கருவிலிருந்து இறப்புவரை தமது
கற்பனையை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்,
நித்தம் நித்தம் கவிஞர்கள்.