கண்ணகி பிறந்த சாதி

கண்ணகி பிறந்த
சாதி
என்றார்கள் ............

கோவலன் பிறந்த
சாதி
என்றார்கள் ..........

காந்தி பிறந்த
சாதி
என்றார்கள் ............

வ.உ.சி பிறந்த
சாதி
என்றார்கள் ...............

காரைக்கால் அம்மையாரும்
இச்சாதிதானாம் .........

பாரதப் பிரதமரும்
இச்சாதிதானாம்............

இவர்களெல்லாம்
பிறந்திட்ட
இச்சாதியில்தான்
நானும்
பிறந்தேனென்ற
பெருமை
ஓர் ஓரமாய்க் கிடக்க..............

அறையில்
என் பசி தீர்த்துக்கொண்டிருக்கிறது
இருபத்தி ஐந்து ரூபாய்க்கு
வாங்கிய
கரீம்பாய்க் கடை
குஸ்கா !

எழுதியவர் : குருச்சந்திரன் (20-Feb-15, 11:57 am)
பார்வை : 2137

மேலே