தேர்தல் இது தேறுதல்

..."" தேர்தல் இது தேறுதல் ""...

குடிமக்களை (குடி)மக்களாக்க
குதூகலமாய் குதித்துவருவர்
நாகரீகம் என்றே பேசியவரோ
ஒருவரையொருவர் அநாகரீக
வாய்மொழி மொழிந்தவாறே
கேட்டிராத புதுபுது வார்த்தை
சந்தனமென சொல்லியவாறு
சாலைகளெங்கும் சாணியினை
சளைக்காமல் பூசியே வந்திடும் !!!

நாற்றமடிக்குமோர் நாடகமேடை
படித்தவறோடே பாமரனுமுண்டு
நாடகம் பார்க்க பணமும்முண்டு
இல்லாத ஊருக்கு சாலயமைத்து
சொகுசு காரிலே பவனி வருவார்
நடிப்பவரிங்கு யாராயிருப்பினும்
மூச்சுப்பிடித்து பார்த்தாகவேண்டும்
நம் முகங்களில் கரிவாரி பூசிவிட
கருப்பு மைதனை பூசியே ஒத்திகை ,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (23-Feb-15, 1:19 pm)
பார்வை : 352

மேலே