அவிங்களுக்கொரு கடுலாசு ம்ம்ம்ம்

அவிங்களுக்கொரு கடுலாசு ம்ம்ம்ம் - (டைரி 2011)
==========================================

இன்றெனை சூழ்ந்திருக்கும்
என் எல்லா தீ வினைகளுக்கும்
காரணம் நானாகிறேன்
என் எல்லா நல் வினைகளுக்கும்
காரணம் நீயாகிறாய்
இதுதான் நீ
நீ உன்னை உன் செயல்களை
உணர்
நீ நீயாக இரு
யாருடைய நகலாகியும் இராதே
முடிந்தால் நிழலாகியிரு
உன்னை நம்புவோர்க்கு
உன் பிழையை, உன் பலவீனங்களை
உன்னாலன்றி வேறு யாராலும்
யூகிக்கவோ
உன் நிறைகுறைகளை சமன் செய்யவோ
முடியாது
உன் தவராலோ
உன் நிறையாலோ
உன்னை மட்டும் நீ அதிகமாக பாதித்திரு
உன் செய்கையால்
யாரையும் அதிகம் பாதித்துவிடாதே
யாருடைய சாபத்திற்கும்
ஆளாகிவிடாதே
உன் பிழை தருணங்களையும்
உன்னை சுற்றியுள்ளவர்களில்
நீ காணும் பிழை தருணங்களையும்
கணக்கிட்டுப் பார்ப்பாயானால்
கோபம் வரலாம்,,
மாற்றம் வேண்டுமென நினைக்கலாம்
ஆனால் அதை யோசிப்பதற்கான
சமயங்களை அதிகம்
விரையம் செய்யாதே
அனைத்தையும் அந்த ஒருநொடி
கோபத்திற்குப்பின்னால் இரசித்துவிடு
நிறையோடும், பிழையோடும் ,,
நாட்காட்டியைக்கிழித்து
நாட்களைக் கொன்று
இப்பிரபஞ்ச நாடகம் வென்றிரு என
என்னை எனக்குணர்த்திய
தருணங்கள் நிறைய
ஆனால் இன்றுவரையும்
சுமை தெரியாத நான்
எனை சுமந்த உனை இழந்ததால்
எழாசுமை கொண்டு
இப்பிரபஞ்சம் வென்றதாய் நட(டி)க்கிறேன்

என்னோடு யாருமில்லாத நள்ளிரவில்
என் உறங்கங் கெடுத்தி
வெற்றுச்சுவரில் மின் விளக்கின்
இமிரி தேடச்செய்யும்
கனவினோடும் இருட்டினோடும்
இன்னும் கோபமும் பயமுந்தானெனக்கு

மடிமீது முகம் புதைத்து
என் கண்கள் நனைந்திடவோ
தளவாடங்களும் இசைக்கருவியும்
வெறுமையில் வெந்து
குழம்பாகிக்கிடக்கும் ஒரீரக்குலையும்
நிரம்பிக்காணும்
என் 16 க்கு 16 படுக்கையறையின்
சிறுபிள்ளைத் தனங்களை
தூரிடவோ யாருமில்லை
இதுகாறும் யாரிடமும்
இதற்காக கேட்டு
பழகியதும் பழக்கியதும் இல்லை
இப்படியே இன்னும்
யாரிடமும் ஏன் உங்களிடமும்
கேட்காத கேள்விகளுடனேயே
அற்பலோலனாகித் திரிகிறேன்
என்றாலும்
என் தனிமையின் தேவைகளுக்காக
கூனிக்குறுகும் நான்
இன்று எத்தனை வளர்ந்தும்
தெருவோரம் அனாதையாக்கி
விடுப்பட்ட
மொழி பி(தி)றக்கா
சிறுவனைப்போலத்தான் ம்ம்ம்ம் ,,
இமைநனைந்து
ஏந்திக்கொண்டிருக்கும்
என்னிரு கருமணிகள் உருள
சுற்றியும் முற்றியும் பார்த்துமுழிக்கிறேன்,,,

ஆநாடுக்கு போனவிங்களுக்கு
சொந்தபந்தமில்லன்னு
சொல்லுறாயிங்க
என்ன பொருத்தமட்டு எப்போவுமே
எங்கூடத்தான் இருக்கீங்க
இங்குட்டுமங்குட்டுமா
எங்கைய புடிச்சுகிட்டு ம்ம்ம்ம்
சாமிக்கு போட்ட கடுதாசிய
மேகங்கொண்டாந்து
சேர்த்துச்சோ இல்லையோன்னு தெரியல
இன்று தீர வற்றிட்ட
அன்றைய என் கண்ணீரில்
பகுதி நனைந்து மைய்யழிந்த கடுலாசுகதான் அவைக
மீந்திய பகுதிய ,, மேகச்சாரல்
நனைச்சதாலேயோ என்னவோ
மனசுக்குள்ள கனவுக்குள்ள
நீங்க அனுப்புற கடுலாசு எல்லாமே
வெத்து காகிதமாவே புலப்படுது
இன்னுங் கொஞ்சோ ஈரோ அதிவமா ம்ம்ம்,,
அத லேசா நக்கிப்பாத்து
அப்போ நெனச்சுப்பேன்
சும்மானாச்சும்
எனக்காண்டி நீங்க அழுவுறதா ம்ம்ம்
நா சரியா முகம்பாக்காத
அம்மாவை
நீ அங்க நல்லா பார்த்துக்கப்பா
அக்காட கனவுல மட்டும்
அப்பப்போ வந்து போறவுக
ஏங் கனவுலயுங்கொஞ்சோ வரலாம்ல
சரி எனக்கு பசிக்கு
இத்தோட கடுதாசிய முடிச்சிக்கறேன் :) :) :)
எனக்கு தெரியும்
உங்களுக்கு இதையெல்லாம்
பாக்க கஷ்டமா இருக்கும்ன்னு
நீங்க தைரியமா இருங்க ம்ம்ம் :)
என்னை நா சரி பண்ணிக்கறேன் :) :)

"ஒர்மைகளுடன்"

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (11-Mar-15, 12:32 pm)
பார்வை : 92

மேலே