கண்ணா வருவாயா

..."" கண்ணா வருவாயா ""...

நட்சத்திரம் பூக்காத வானில்
தனியான நிலவாய் அவள்
காய்ந்த மரத்து சருகுகளில்
சாந்தமே உருவகமாகினாள் !!!

நெற்றிச்சுட்டியும் சிணுங்கா
வளையல்களும் சிரிக்கா
வசந்தமிழந்த தென்றலாய்
அந்த ஏகாந்த வேளையில் !!!

ஏக்கத்தோடே எதிர்பார்த்து
தன் சோகமே சொல்லுகிற
அழகின் பெண் கிளியொன்று
ஆண் மயிலை இசைக்கிறது !!!

கண்ணனுக்கு காத்திருக்கும்
காவியத்தின் மீராயிவள்
மண்டியிட்டு யாசிக்கிறாள்
அவனையே பாடுகிறாள் !!!

சென்றவனை காணவில்லை
சேதியேதும் வரவுமில்லை
வேதனையால் வாடுகிறாள்
வேள்வியினில் வேகுகிறாள் !!!

கண்ணா நீ மீட்டும் நாணாக்கி
அவள் விரலலசை நாணாகி
இவள் மீட்டலின் இசைகேட்டு
விரைந்தே நீயும் வந்துவிடு !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (15-Mar-15, 11:49 am)
Tanglish : kannaa varuvaayaa
பார்வை : 316

மேலே