மரத்தடி காதல்-தோழர் அகன் அவர்களின் கவித்தலைப்பு
காதலிலே தோல்வி என்று கலங்கி நிற்கும் கண்ணா ,
உனக்கு கோவம் வரும் காதலோட நிலமைய நான் சொன்னா ....
நான் சொல்லுறது ஆம்பளைக்கு மட்டுமல்ல பொண்ணு , உங்களுக்கும் சேர்த்துதானே சொல்லபோறேன் கண்ணு..
. மணிக்கணக்கா செல்லுல நீ போடவேணும் கடலை,
நீ மறந்துபுட்டா வேற ஆள தேடும் அந்த விடலை...
தினம்தினம் அவ(ன்) செல்லுக்கு நீ பண்ணனும் டாப்அப்பு,
நீ தவறிப்புட்டா காதலுக்கு அவ(ன்) வச்சுடுவா(ன்) ஆப்பு ,
அடுத்தவ(ன்) கிட்ட பேசினாலே வந்திடும் சந்தேகம் ,
அந்த சந்தேகத்தால் தினம்தினம்தான்
நொந்தது உன் தேகம் ........
காதலிச்ச ஆளுமேல வேணுமே நம்பிக்க -
நீ நம்ப மறுத்துப்போனதால இப்போ தனிமரமா நிக்க..
காலைமுதல் மாலைவர பேசுவீங்க பேச்சு - அந்த பேச்சினிலே காமம் மட்டும் ஆக்கிரமிச்சு போச்சு.....
மனசு செய்யும் காதலிலே மற்றதை எதிர்பார்த்த ! காதல் என்று சொல்லிபுட்டு கண்டதையும் சேர்த்த ..
பார்க் பீச்சு எங்கும் உங்க எல்லைக்கு அளவில்ல, உன்னைப்போல காதலரால் பொதுமக்களுக்கும் தொல்ல .....
. கிடைக்குற சந்திலேல்லாம் பாடுறீங்க சிந்து - அத பாக்கையில வெந்துபோகும் எங்க மனம் நொந்து ....
. சின்ன சின்ன லீலைகளை நீங்களும்தான் செஞ்சு ,
பார்த்து நாளும் கெட்டுபோகும் சின்ன பசங்க நெஞ்சு..... அவனுக்கும் அறிவில்ல பெண்ணே உனக்கு எங்க போச்சு, இந்த சீண்டல்தான உங்களுக்கு நாகரீகம் ஆச்சு.......
ஆம்பளைங்க தப்பு செஞ்சா கண்டுக்காத தேசம் , பெண்ணே நீயும் செஞ்சுபுட்டா உன் வம்சத்தையே பேசும்....
பெத்தவங்க இதையும் கேட்டால் அவங்க மனம் கூசும், உன்ன பெத்ததுக்கு அவங்களதான்
ஊருலகம் ஏசும்....
நீ காதலையும் காமத்தையும்
பிரித்தரிஞ்சு பழகு - அந்த பழக்கம் தானே காதலுக்கு என்னைக்குமே அழகு....
நீ பண்ணுறதெல்லாம் காதல் இல்ல
பிக்அப்பு டா கண்ணு , அதுக்கு ஏண்டா கலங்கி நிக்க அடுத்தத ரெடி பண்ணு .....
கண்கள் மட்டும் பேசும் பேச்சு உண்மை காதல் ஆச்சு ,
அதைத்தவிர மத்ததெல்லாம் -வெறும் சுண்ணாம்பு பூச்சு .........
கண்ட கண்ட கண்ட்றாவிய காதலுன்னு சொன்னா - உன் கன்னம் ரெண்டும் வீங்கிபோகும்
டீக்கடையின் பன்னா ..
.பிரிஞ்சிருந்தும் வாழும் காதல்
உண்மையான காதல் - அந்த காதலுக்கு மட்டுமில்ல என்னைக்குமே சாதல்...
நீ செய்யுறத காதலுன்னு மறுபடியும் சொல்லு ,
ஓங்கி ஒன்னு விட்டுடுவேன் உடஞ்சுபோகும் பல்லு....
. இத்தோட முடிச்சுக்குறேன் என்கதைய சொல்லி , இதுக்குமேல அழுதா உனக்கு வச்சுடுவேன் கொள்ளி..............