வீழ்ந்துவிடுவேனாஇல்லை மடிந்துவிடுவேனா -உதயா
வீழ்த்த எதிர்த்து நின்றால்
...............வீழ்ந்துதான் போவேனா ?
தாழ்த்த பிடித்து இழுத்தால்
...............தாழ்ந்துதான் போவேனா ?
அமிர்தம் பொங்கும் அலைக்கடலில்
...............நஞ்சு ஊற்றுப் பிறந்தால்
நஞ்சுண்டு மாய்ந்து விடுவேனா ?
...............நஞ்சுக்கே அமிர்தமாய் மாறாமல் போவேனா ?
எம்மை சிறை பிடிக்க பின்னப்படும்
...............சிலைந்திக் கூட்டங்கலின் வலையில்
இரையாக அடைப்பட்டுப் போவேனா ?
...............வலைவிரித்த சிலந்தியை இரையாக்காமல் விடுவேனா ?
தீயவர்கள் திணித்து செல்லும் தீஞ்ச்சொல்லில்
...............என் மனமும் மரணித்துப் போகுமா ?
தீஞ்ச்சொல்லை திகட்டா அன்னமாக்கி
...............என் வயிறதனை மலமாக்காமல் விட்டுடுமா ?
பாதைகள் தகர்த்தப்பட்டால்
...............என் பயணம் முடிந்து போகுமா ?
பயணத்தின் கிளைகளில் முட்களை பூவித்தால்
...............என் பாதமதனை பஞ்சென எண்ணாமல்தான் அஞ்சுமா ?
சூழ்ச்சிகள் சூழ்ந்துக் கொண்டால்
...............அச்சத்தால் மண்டியிட்டே நிற்பேனா ?
சூட்சிகளை பொசுக்கி விடும்
...............சூரியனாய் கொதிக்காமல் போவேனா ?
எரிமலையாய் எதிர்த்து நின்றால்
...............எரிபொருளாய் எரிந்துப் போவேனா ?
எரிமலை அணைத்துவிடும் பனிமலையாய்
...............புது அவதாரம் துறக்காமல் போவேனா ?
காலத்தின் சுழற்சியில் காலன்
...............எம்மை நெருங்க நினைத்தால்
காலனுலகிற்கு வாசனாய் போவேனா ?
...............காலனையே எமக்கு தாசனாய் மாற்றாமல் விடுவேனா ?
அடே நயவஞ்சகனே கேளடா ........
தோல்விகள் தொடர்சியானால்
...............என் மனம் துவண்டுவிடுமோ ?
வெற்றி சோலையினை அமைக்க சிந்திக்காமல்
...............என் மதி சுருங்கிவிடுமோ ?
நான் உன் கையில் ஒட்டும்
...............தூசி என்று நினைத்தாயா
உன் கருவிழியை கிழிக்கும்
...............கம்பீர தூசியடா
உன் காலில் மிதிப்பட்டு
...............வதைபடும் எறும்பென்று நினைத்தாயா
உன் காலினையே துளைத்துவிடும்
...............இரும்பு துரும்படா
என்னை கடைக்கண்ணால் முறைத்துப்பாத்தாலே
...............உன்னை கரும்பாக எண்ணி மென்று துப்பிவிடுவேன்
என் முயற்சிக்கு முற்றாக நினைத்தாலே
...............உன் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன்
என் வாழ்வில் ............
ஆதியும் நானே
...............அந்தமும் நானே
சிவனும் நானே
...............ஸ்ரீராமனும் நானே
பகைவனும் நானே
...............நண்பனும் நானே
தோல்விக்கு பிள்ளையும் நானே
...............வெற்றிக்கு தந்தையும் நானே
ஆக்கமும் நானே
...............ஆக்கத்திற்கு இரையும் நானே
தொடக்கத்தின் தொடர் புள்ளியும் நானே
...............முற்றிட்டு தொடரும் முடிதொடர் புள்ளியும் நானே .............