நாரை விடு தூது

நாராய் நாராய் செங்கால் நாராய்
சீராய்த் தூதை சொல்வாய் நாராய்
கோரம் புரியும் மானுட அறிவும்
சோரம் விரிக்கும் ஜாதிமத அரிப்பும்
நோவு சிரிக்கும் சாத்திரச் சடங்கும்
சாவு புணர சத்தியம் புலர வழி கேட்டு
சாமியிடம் தூதை சொல்வாய் நாராய்
சாமியின் தூதை சொல்வாய் நாராய்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (22-Apr-15, 8:42 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : naarai vidu thootu
பார்வை : 365

மேலே