சுமக்காமல் சுமந்தாய்

ஐந்திரண்டு மாதம் சுமந்து
வலிகொண்டு பெற்றாள் அன்னை!!
ஆனால்
இருபது வருடமாய்
சுமக்காமல் சுமந்தாயே
என்ன சொல்ல உன்னை .
தோளில் சுமந்தாலும் ,

வார்த்தையால் வழி நடத்திய,
கண்ணரிந்த தெய்வம் நீ

வெளிப்படையாய் அன்பு காட்டி
நடிக்கும் உறவினர்கள் மத்தியில்
உள்நெஞ்சில் ஆழ் கடல் அன்பால்
என்னை வழி நடத்தியவன் நீ
என்றும் நீயே என் வழிகாட்டி

என்றும் நீயே என் தெய்வம் தந்தையே !!

எழுதியவர் : (29-May-15, 3:39 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
பார்வை : 69

மேலே