காதலின் கோபம்

ரோஜாவின் முள் அதன் இதழ்களையே காயப்படுத்துவது போல்

என் கோப சொற்கள் என்னையே வதைத்தது

உன்னிடம் நான் கோபம் கொண்ட தருணம் ……..



பௌர்ணமி நிலவு தான்..

பிறை தூங்கிய அமாவசையாய் தோன்றியது

உன்னிடம் நான் கோபம் கொண்ட தருணம் …..



காற்றும் திட பொருளானது

கண் பார்க்கும் இடம் எல்லாம் காரிருலானது

உன்னுடன் நான் கோபம் கொண்ட தருணம் ……..



கோடை காலம் பெய்யும் மழை போல்

பிறர் உரையாடல்களுக்கு சில பொழுதுகள் மட்டுமே மறுமொழி அளித்தேன்

உன்னுடன் நான் கோபம் கொண்ட தருணம் ……..



உலகில் கணமான பொருள் யாதென்று கேட்டால்

என் உள்ளம் என்று உரைத்திருப்பேன்

உன்னுடன் நான் கோபம் கொண்ட தருணம் …….



தவறு என் மேல் என்று உணர்ந்தும் ஏனோ

விரல் இடுக்கில் சிக்கிய வளையல் போல்

வலி கொண்ட நெஞ்சம் தாண்டி வர மறுத்தது

என்னை மன்னித்து விடு என்ற வார்த்தைகள் ……



பூட்டினுள் நுழைந்த சாவி போல்

மெல்ல திருகியே என் கோபம் கரைத்து

உன் பதிலுரைகள் ………



ஆமை முயலாய் என் கோபம் வெரி பிடித்து ஓட

உன் காதல் மெல்ல அதை வென்றது

என் விழிகள் கண்ணீர் துளிகள் உமிழ்ந்தது .....



சுற்றும் சக்கரமாய் சுழன்றே

அனுப்புகிறேன் என் வார்த்தைகள்

உன் மன்னிப்பு வாசல் என்றேனும் அடையும் என்ற நம்பிக்கையில் ……



தவறை நான் செய்தும்

மன்னிப்பை நீ கோரிய தூயவனே

நீ என்னை மன்னிப்பதற்காக அல்ல இந்த கவிதை

என் விழியில் பெருகும் கண்ணீர் துளிகளை மறைப்பதற்காக…….

எழுதியவர் : srimathi (12-Jun-15, 6:35 pm)
சேர்த்தது : srimathi
Tanglish : kathalin kopam
பார்வை : 179

மேலே