வெங்காயம்

வயதுக்கு வந்த
பெண்ணாகி..
இன்னும்
சமைக்கத் தெரியாம ..
அம்மாவின் ..
முதல் நாள்
பாடத்தில் ..
வெங்காயம் நான் உரிக்க..
..
உள்ளே வந்த
அப்பா..
என் கண்களில் நீரை பார்த்து..
கத்தினார் அம்மாவை பார்த்து
..
"வெங்காயம்...
நீ உரிக்க வேண்டியதுதானே ?"
..
"மாமியார் வீட்டுல மொத்துவாங்க.."
இது அம்மா..
..
"வீட்டோட இருக்கற
மாப்பிள்ளைய
பிடிக்கறேன் பாரு "
..இது..அப்பா!

என் வாழ்வின்
ஒவ்வொரு தினத்தையும்
தனதாக்கிய
அப்பா!

எழுதியவர் : கருணா (21-Jun-15, 10:12 am)
Tanglish : vengaayam
பார்வை : 264

மேலே