முகத்திரை - உதயா

கண்ணில் காண்போர்
யாவரும் கச்சிதமான
முகத்தோற்றத்தினை
பெற்றிருந்தனர் ..!

உடன் வாழ்பவர்களும்
நெருங்கிய உறவுகளும்
முதன்மை இடத்தினை
வகித்திருந்தன ..!

பாலை வனத்தில்
மணலாகவும்
பணக்காரன் வனத்தில்
பாலாகவும் ..!

முகத்திரைகளை எல்லாம்
கிழிக்க முற்பட்டால்
புரிந்துவிடும் உறவுகளெல்லாம்
வெறும் ஒட்டுண்ணிகள் என்று ..!

முகத்திரையை கிழிக்கும்
பயணத்தை தொடர்ந்துக்கொண்டே இருந்தால்
விளங்கி விடும் கடவுளும்
ஒரு வேஷதாரியே என்று ..!

எவரும் எதையும் செய்ய
முயல்வதேயில்லை
ஆனாலும் யாரும்
முயல்கின்றனர் ...

வெட்கம் இல்லாமல்
சொரணை இல்லாமல்
அதே போல் கச்சிதமான
ஒரு முகத்திரையை
செய்வதற்கு மட்டும் ..!

எழுதியவர் : உதயா (30-Jun-15, 11:24 am)
பார்வை : 543

மேலே