மனிதம் புரியாக்காதல்
அவள் நோக்க அவனும் நோக்க...
கவி பாடும் இதயம் பாட...
கண்ணிரெண்டும் நடனமாட...
நாவினிலே கடல் நுரை ஊற...
மனதெல்லாம் மலர் படுக்கையாய்....
அடடா அவனோ தரிசனம் என்றான்...
அடடா அவளோ பாக்கியம் என்றாள்...
அடங்கா ஆசையாய் ஓடிசென்றார் ...
இரு கையும் அள்ளித்தழுவிட ...
தடைக்கல்லாய் ஒருவன் தடுத்து நின்றான்...
அவளோ கை கூப்பி வேண்டும் என்றாள்...
அவனோ கால் பிடித்து கதறி நின்றான்...
இறுதிவரை பிரித்தெரிந்தான் கருணையின்றி...
இனியடையோம் என்றேங்கியே இருஇதயம் ...!
கண்டதும் ஓடி அடைந்ததோ குப்பைத்தொட்டி...
அவள் முகமோ புன்னகைக்க
அவன் தொடைத்தான் தன் தங்கை கண்ணீர்...
அச்சிறுவர்க்களிக்க மறுத்த உணவெல்லாம்...
பசியறியா குப்பை தொட்டி புசிப்பது ஏன் ???
மிஞ்சியதை குடுப்பதினால் ஏது குறை இவ்வுலகில்...
மற்றவர் பசியறிவோம் மற்றவர் பசிதீர்ப்போம் :)
என்றும் அன்புடன் ஸ்ரீ :)