எனது மகளும் நானும் பாடம் 1
என் மகளும் நானும் (பாடம் 1)
அப்பா...
காக்கா ஏன் கருப்பா இருக்கு
பூனை ஏன் பால் குடிக்குது
வானம் ஏன் இவ்வளவு பெருசா இருக்கு
அவரு ஏன் பிச்சை எடுக்குறாரு
அந்ந பையன் ஏன் கால்ல செருப்பு இல்லாம நடக்குறான்
என்னோட பொம்மை ஏன் பேச மாட்டேங்குது
எல்லாரு ஏன் சண்டை போடுறாங்க
நம்ம வீடு ஏன் சின்னதா இருக்கு
எல்லாரு தேடுறாங்களே கடவுளை யார் தொலைச்சாங்க
பசி ஏன் வருது....
தொடரும் கேள்விகள்
பலவற்றிற்கு
என்னிடம் பதில்கள் இல்லை
பதில் வராத கேள்விக்கு
என் கண்களைப் பார்ப்பாள்
நான் புன்முறுவலுடன்
ஒரு முத்தம் கொடுப்பேன்
அவள் அடுத்த கேள்வியை
ஆரம்பித்து விடுவாள்
நான் கற்றுக்கொண்டேன்...
வாழ்க்கையை வாழ்வதற்கு
அனைத்து கேள்விகளுக்கும்
விடைகள் தெரிய வேண்டிய அவசியமில்லை
அன்பு ஒன்றே போதும்