காலம் நம்மை விரும்பட்டும்

எப்படி இருக்காய்
என் அன்பே ?
உன் சுவாசம் எனும்
நூழிலை அறுந்த போது
நம் காதல்
எங்குப் போனது ? ..
கனவில் வருவேன்
என்பாயே பெண்ணே
தூக்கமே எனது துக்கமாகி
நனவில் தொலைந்துப் போகாவா ?
எந்தக் கண் பட்டதோ
நம் காதல் மேல் ,
யார் கண்ணிலும்
படாது உன் உருவம்
கரைந்துப் போக ?,
தூங்கு பெண்ணே தூங்கு
நான் வந்து எழுப்பும்
காலம் தூரமில்லை !
விதிப் பிரித்த
காதல் இதுவென்று
அதர்க்கும் இழிப் பெயர்
வரக்கூடாது .
உடலால் சேர்ந்தால்
ஊணமாகி விடுமோ
நம் காதல்
என்ற காதல் தேவனின்
வரமல்லவோ நாம் ?
காத்து இரு சகியே
மெல்லிய கனவுடன்
காலம் நம்மை விரும்பட்டும் ...