சசிபெருமாள்

குடித்துக் குடித்து
குடியைக் கெடுக்கும்
'குடி 'மக்களை காப்பதற்காய் ..

மதுவரக்கனின்
கோரப்பிடியில் சிக்குண்டு
சாகாமல் செத்து
வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்
போதை மக்களை மீட்பதற்காய் ..

காந்தி வழியில்
சாந்தவழியில்
போராடி உயிர் நீத்த
சசிபெருமாள்!
நீ ஒரு
சரித்திரப் பெருமாள் !!

எழுதியவர் : அண்ணாதாசன் (9-Aug-15, 10:01 pm)
சேர்த்தது : அண்ணாதாசன்
பார்வை : 72

மேலே