கர்னாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்ற அழகான அந்த இளம்பெண் தன் காதலன் குடும்பத்தை முதன் முறையாக அவர்கள் வீட்டுக்குச் சென்று சந்திக்கிறாள் எல்லாரும் அன்பாகவும் ஆசையாகவும் அவளை வரவேற்று அவளோடு பேசி சிரித்து மகிழ்கிறார்கள் அவளைப் பாடச்சொல்லி கேட்கிறார்கள்

இங்கிதம் அறிந்து சங்கீதம் பாடினேன்....
சங்கீதத்தில் மௌனம் கலைத்தேன்
வாழும் ஆசையோடு உன் வாசல் வந்தேன்
வந்த பின்பு சொர்க்கம் கண்டேன்.
அத்தை மகனாய் நீ இருக்க
நாரை போல நாத்தினார் இருக்க
பூவாக நான் வந்தேன்....மாலையாக மாறி நின்றேன்
புது உலகம் கண்டேனே.......
புல்லாங்குழலை(காதலன்) காதலித்தேன்....இன்று
மூங்கிலை(காதலனின் பெற்றோர்) கண்டேனே.......
ஏழு ஸ்வ்ரம் நான் படிச்சு...
உன் வீட்டுக்குள்ள கால் பதித்து
உன்னை நான் கரம் பிடிப்பேன்
இரவோடு என் விழிகள் கண்ட சொப்பனம் எல்லாம்
இன்று என் குரலோடு இசையில் சம்மதம் சொன்னேன்.
இனி நீ கொடுக்க ரோஜா,கடிதம்
தேவை இல்லை...
உன் வீடு(காதலனின் இதயம்) போதுமே!!!!!
தாலி கட்டி என்னை நீ இழுக்க
இரத்ததோடு(சொந்ததோடு) நான் சேர காத்து இருக்கிறேன்......
காதலுடன் காமமும் கூடுதே......

எழுதியவர் : தமிழ்செல்வன் (12-Aug-15, 12:00 pm)
சேர்த்தது : தமிழ்செல்வன்
பார்வை : 77

மேலே