பின் அவன் யாராம்
பின் அவன் யாராம்
=====================
அவன் அற்பம் தாமதித்திருக்கலாம் போல்
செங்கண் நிறம் மாற
அங்கண் விதைத்திருந்தான் தேறல்
மங்கல் மை ஈர் இழை ஒன்ற
வதனம் பொங்கியதெல்லாம் புதுமழையாம்
பிடிகொண்ட கால்களோ
பின்னல் தவிர்க்க
கடக்கை மயிர் பிசைந்து
முலைகள் எழுந்தன
வேண்டியும் அழைத்தன
மர தேகம் கொள்வாள்
மகிழ்ந்தெல்லாம் ஆனப்பின்னால்
இரு மலையிடுக்கில்
நாணம் குளிரேற
இருள் கட்டியிருப்பாள்
அட பசுமைத் தின்ற காரை போல
நாவில் சும்பிக் கிடப்பாள்
காலப்பசியின் கோரத் தாண்டவம்
உடுக்கை அடிக்கிறது
அகவையின் அடிவயிற்றில்
ஆணாகிவிட்டால் அர்த்தம் கிட்டாதாம்
அவளாகிவிட்டால்
ஆளாகிவிட்டாளாம்
பனிநீர்த்துளி படாமல்
சிறுபூக்கள் சிலிர்த்திடுமா என்ன ம்ம்ம்
அந்த மலர்க்காட்டின்
பின் கூந்தல் முகவரி விலக்கி
ஈரம் பதிந்தான் ஆதவன்
உலகத்தின் முத்தமெல்லாம்
ஒருவன் உண்ட
மாழையில்
என்றும் இறங்கிடாத
ஆறங்குல சூட்சமத்தில்
பித்துச் சிரி சிரித்தே
கல்லெறிந்து கல்லெறிந்து
மொட்டரும்பச்செய்தவன்
பெண்ணாக்கி
பார்வை இறக்கிவிட்டானே
பின் அவன் யாராம்
அனுசரன்