ஆசைகள்
ஆசை அறிஞனாக ஆசை
அது அறிவு தந்த ஆசை
உண்மை பேச ஆசை
அதில் உறுதி கொள்ள ஆசை
எழுத எழுத ஆசை
அது அன்புத் தமிழின் ஆசை
வெற்றி கொள்ள ஆசை
அது வீரனாகும் ஆசை
இளமை கொள்ள ஆசை
அது முதுமை வேண்டா ஆசை
முதுமை கொள்ள ஆசை
அது அனுபவம் காண ஆசை
கனவு காணும் ஆசை
அது பறந்து செல்ல ஆசை
உலகம் சுற்ற ஆசை
உயர்ந்து நிற்க ஆசை
புரிய வைக்கும் ஆசை
எதையும் புரிந்து கொள்ள ஆசை
சிரித்துப் பேச ஆசை
எதையும் சிறக்கப் பேச ஆசை
கவிதை எழுத ஆசை
அது கவிஞன் ஆகும் ஆசை