கையறு

வேலை இல்லா ஏழை வாழ முடியா பாளை

மனைவியும் மகளும் கொண்டவனுக்கு
மாளாத கையறு மாறாது தினந்தோறும்
அணிகலன் கேட்பவளுக்கு ஆறுதலும்
ஆசைகளை கொட்டினால் தேறுதலும்

உரைத்தால் போதுமோ உணர்த்தல் தீருமோ

எளிய வாழ்க்கைக்கும் பொருள் தேவை
அறியாமலா அன்று சொன்னார்
அருளில்லார்க்கு அவ்வுலகில்லை
பொருளிலார்க்கு இவ்வுலகில்லை

படைத்த இறைவனும் பாசாங்கு செய்கிறான்
பாவி பாவி என பட்டம் சேர்க்கிறான்
எந்தப்பட்டமும் வாங்கி தராத வேலையே
ஏற்கும் இவ்வுலகம் எனக்கும் சோலையோ

பாரில் வேலையும் பரிந்துணர யாருண்டோ
வெட்டியான் வேலையும் காலி செய்த
அரசுக்குமே இது அடுக்குமா நீதி ?

பாவம் தாபம் பரிதாபமாகுமோ
படைத்த இறைவனும் என்னை
கொல்லாமல் கொல்கிறான்
சொல்லாமல் சொல்கிறான்

பாவம் தீர்க்க படைத்தானோ ?
பாவம் தீரும் வரை துடிப்பேனோ?

எழுதியவர் : செல்வமணி (21-Aug-15, 11:54 pm)
Tanglish : kaiyaru
பார்வை : 66

மேலே