நிம்மதி

இதுநாள் வரை என்னை
முதுகில் சுமந்த அவனை
இறுதியில் எட்டி உதைப்பதே
என் பொதுவான வழக்கம்....
அறிவு விளக்கேந்தி எப்படியோ
தத்தி தத்தி நிமிர்ந்தெழுந்து
இன்று நான் செல்லும் அதே
சாலையில் முன்னேறிவிட
எத்தனிக்கிறான்....
இதில் எனக்கென யாதொரு
இழப்புமில்லையெனினும்
அவன் கால்களை முறித்து
குடிலையும் எரித்துவிட்டேன்…..
நிம்மதியாக இருக்கிறது.

எழுதியவர் : தர்மராஜ் (8-Sep-15, 4:37 pm)
Tanglish : nimmathi
பார்வை : 670

மேலே