திராட்சைப் பழம் புளிக்கவில்லை
திராட்சைக் கொடி
நரி வருகை!
எம்பிக் குதிக்கிறது
கனிகள் எட்டவில்லை!
பக்கத்து வீட்டில்
மேக கன்னிகா;
முக்காலி தந்துதவ
வயிறு முட்ட
திராட்சைத் தீனி;
நரிக்கு திருப்தி;
திராட்சைப் பழம்
புளிக்கவில்லை!