பிரபலம்

அவன் அதிகம் பிரபலம் ஆகாமல் இருந்தான் .
ஏதோ ஒரு கணக்கில்
பிரபலமானவர்கள் வரிசையில்
அவன் பேரைப் போட்டார்கள் .
அவனிப்போது ரொம்பப் பிரபலம் ..
ஆனால் அவன் கவிதைகள் என்று சொன்னவை
அவனுக்கும் புரியவில்லை
அவனைப் படித்த வாசகனுக்கும் புரியவில்லை.
ஆனாலும் அவனிப்பப் பிரபலம்.

``வட்டங்களில் கழுதை தேய்ந்து உருவானது
விரல் படாத மாமிசத்தின்
அகிலத் திரையில்
தெரிந்த ஒரு உருவம்
நான்தான் ஆதிமூலம் என்றது
படித்த பக்கங்களுக்கு அடையாளம் இடாமல்
புத்தகத்தைபாதியிலே மூடி வைத்தேன்.
அனேகமாக மூன்றாம் பிறை
மூன்று மாதம்
உபன்யா வாசம் இருக்கலாம்.''

இப்படி நானும்
கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன்.
அடுத்த முறை
நீங்கள் வரும்போது
அனேகமாக நான்
பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பேன்.

எழுதியவர் : சுசீந்திரன். (21-Sep-15, 10:22 pm)
Tanglish : prabalam
பார்வை : 67

மேலே