மரபுகள்
" மரபுகள் "
நேர்மையாம் பகுத்து ஆய்ந்த அறிவு வரவு எல்லாம் மரபு ஆ(க்)கும்
மேன்மை கொண்டது தான் மேதினி
அறிவற்ற மரபு
நெறியற்ற களவுக் காமம்
ஆனந்த அழுகை தான்
வறுமையாய் இளிவாய் இழவாய் அசைந்து
நான்கு திசைகளாய் இயங்குகிறது
பழக்கம் வழக்கமாய்
வல்லினம் இடையினமாய்
மெல்லின மூச்சின் முழக்கம்
பார் வியக்கும் சுகம் கற்கும்
பவித்திரப் பொருள் பாதுகாப்பு
இவைகள்
வேதனை விதைகள் அல்ல
சாதனை விருட்சங்கள்