மின்னலுக்கு பயந்தவள்

அவள்
மின்னலுக்கு பயந்தவள்..
நான் அவளின்
விழி மின்னலுக்கு விழுந்தவன்..

அவள்
யன்னலுக்கு அழகு சேர்ப்பாள்..
அந்த அழகினால்
என்னை ஈர்ப்பாள்..

அவள்
கன்னல் குரல் கொண்டவள்..
அந்த குரலினால்
எந்தன் இதயம் தின்றவள்..

அவள்
பின்னல் கொடுக்கும் கற்பனை..
நான் படைக்கும்
கவிதைகூட ஆகும் விற்பனை..

அவள்
இன்னல் நீக்க வந்தவள்தான்..
அவள் சிரிப்பால்
எனக்கு இறக்கை தந்தவள்தான்..

அவள்
தென்னலாகி இனிமை சேர்த்தாள்..
அதில்
துன்னலானது என் மனது..

அவள்
நென்னல் ஏனோ வரவில்லை..
அதனால் செலவே
கவிதையில் வரவே இல்லை..

அவள்
சின்னல் செய்தால் அழகோஅழகு...
அவளது
பன்னலுக்காகவே கவிதை பழகு..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Oct-15, 7:50 am)
பார்வை : 231

மேலே