இறப்பு வரை உயிர்ப்பிக்கும் இரக்கம் - சிஎம்ஜேசு
புல்லாய் நீர் என்னை நினைத்து
பொசுக்க நினைத்தது இல்லை - ஆனால்
நான் தான் என்னை தீயிட்டு கொளுத்தி
சாம்பலாக்கிக் கொள்ள நினைக்கின்றேன்
கொலைச் செய்து கொள்ளை அடித்து
கொடுமைகள் பல புரிகின்றேன் - ஆனாலும்
காப்பாற்றிக் கரை சேர்த்து - நல்லவனாய்
மாறுவேனா என்றேதிர்ப்பார்க்கிரீர்
கயமை கொண்டு காமம் இணைத்து
பெண்ணினத்திற்கு தீங்கு இழைக்கிறேன் - இருந்தாலும்
வாய்ப்புக்கள் தந்து வழிகள் காட்டி என்
மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்
மறைந்து விட்ட சூரியனால் இருளடைந்த பூமிக்கு
நிலவாக என்னை மாற்ற முயன்றீர் - நானோ
நகரங்கள் செதுக்கி நரகங்கள் கண்டு
நன்மை என்னும் உன்னை மறந்து போனேன்
இருந்தாலும் நான் இறந்தாலும் நீர் என்னை
உயிர்ப்பித்து இரக்கம் காட்டுகிறீர் - இனி
நான் பிறக்கும் ஜென்மம்
நன்மையை மட்டும் உண்டு பண்ணட்டும் என்றெண்ணி
( தவறு செய்யும் மனிதர் திருந்திட இந்த படைப்பு )