என்ன சொல்லி கீழே விழும் மழைத்துளி

என்ன சொல்லி கீழே விழும் மழை துளி....
மந்த மாருதம் தீண்டி
முகில்களை தாண்டி
விழுகின்ற தருணங்களில்....
என்ன சொல்லி கிழே விழும் மழைத்துளி....

விளை நிலங்கள் யாவும்
விலை நிலமாய் மாறும் வினாடிகளில்
மாந்தர்களின் நிலையை எண்ணி
என்ன சொல்லி கீழே விழும் மழை துளி...

கங்கை- காவேரி கோப்பில் இருக்க
கரை வேட்டி கயவர்களின் வாக்கை எண்ணி
என்ன சொல்லி கீழே விழும் மழை துளி...

மழை வேண்டி ஊர் கூடி வேண்டும் போதும்
ஊர்கூடி தூற்றும் போதும்
மனிதர்களின் மனதை எண்ணி
என்ன சொல்லி கீழே விழும் மழை துளி...

காகித கப்பல் தனி கையில் கொண்டு
கார் மேகம் கவனிக்கும்
குழந்தையின் ஏக்கம் தீர்க்க
என்ன சொல்லி கீழே விழும் மழை துளி....

வயல்கள் எங்கும் விளைந்து கிடக்கும்
கான்கிரீட் வீடுகளுக்கு
என்ன சொல்லி சொல்லி கீழே விழும் மழை துளி...

அந்தி பொழுதில் பொழியும் மழைத்துளி கண்டு
குடை விரிக்கும் குமரிக்கு....
என்ன சொல்லி சொல்லி கீழே விழும் மழை துளி...

ஒரு வேளை இதைத்தான் சொல்லுமோ?
வரும் மூன்றாம் உலக போரின்
மூலதனம் நானடா?!
மானிட என...?!

எங்கே கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்
தோழர்களே.....
என்னதான் சொல்லி கீழே விழும் இந்த மழை துளி.....?!

எழுதியவர் : ரணதீரன் (12-Oct-15, 6:27 am)
பார்வை : 172

மேலே