புலம்பும் பொறியாளன்

முயன்றால் முடியாதது ஏதுமில்லை
பலமுறை முயற்சித்தும் எனக்கு வெற்றிகிட்டவில்லை
வெற்றிக்காக செய்த தியாகங்கள் கொஞ்சமில்லை
வேலைக்காக நான் ஏறாத இடமுமில்லை
உண்ண உறங்க நேரமில்லை
வாழ்க்கையை பற்றி சிந்திக்க முடியவில்லை
நான் எழுதாத தேர்வுமில்லை
வேலைதேடி ஊரூராக திரிந்ததால்
இன்று விண்ணப்பம் வாங்க காசுமில்லை
அயராது உழைக்கிறேன் ஓய்வின்றி படிக்கிறேன்
தோல்வி தவிர எதுவும் கிட்டவில்லை
படிக்காதிருந்தால் நான் சிற்றாள் ஆகிருப்பேன்
பொறியாளன் ஆனதால் வேலையின்றி தவிக்கிறேன்
படிக்கும் போது ஊரெங்கும் மதிப்பு
இன்று வேலையின்மையால் நான் சம்பாதித்தது வெறுப்பு
நான் தோல்விக்கு நண்பன் ஆனேன்
வெற்றிக்கு எதிரியானேன்
பகுத்தறிவாளன் என்று புத்தகம் தூக்கி பள்ளிக்கு சென்ற நான்
இன்று ஜாதகம் தூக்கி கோவிலுக்கு செல்கிறேன்
முயற்சிக்க மறக்கவில்லை வெற்றிக்கு அருகில் செல்கிறேன்
தொடமுடியாமல் தவிக்கிறேன்
பிறர் அழும்போது ஆண்பிள்ளை அழக்கூடாது என்ற நான்
இன்று பெண்பிள்ளை போல் அழுகிறேன்
தோல்வி வெற்றிக்கு முதல் படி என்றார்கள்
நான் இதுவரை தோல்வி படிகளையே பார்க்கிறேன்
படிக்கும் பொது நேரத்தை வீணடிக்காத நான்
இன்று வேலைதேடி நேரத்தை வீணடிக்கிறேன்
கல்வியால் எதையும் சாதிக்கலாம்
இன்று கறைபடிந்த கல்வி என்னை சொதிக்கிறது
உலகம் ஒரு நாடக மேடை என்றார்கள்
அதில் எனக்கு தோல்வியுறும் கதாபாத்திரம் போலிருக்கிறது
நல்லவனுக்கு காலமில்லை
உழைப்வனுக்கு ஊதியமில்லை
காலம் கலியுகம் என்று என்ன தோன்றுகிறது

--விடாமல் முயற்சித்து வீழ்வேன் (வாழ்வேன் ) புலம்பும் பொறியாளன்

எழுதியவர் : (4-Nov-15, 2:55 pm)
பார்வை : 281

மேலே