இதழ்கள்
ஒவ்வொன்றாக
கருநிழல் பிணக்குகளைக்
கடந்து செல்கின்றோம் நாம்…
திசை தெரியா
சாலைகளில் நாம் நடக்கையில்….
என் புனிதமற்ற காதுகட்கு
உனக்குள் கொப்பளிக்கும்
நாணமில்லாத காமத்தைக்
கேட்கும் திறன் வந்து விட…
எனது நெஞ்சில்
இருந்த சோக ரோசாக்களின்
இதழ்கள் வாடி அதன் இதழ்கள்
ஒவ்வொன்றாய் கீழே விழுந்தன….
நரம்புகளில் கிளை விட்டு
உரம் போட்ட மரமாக வளர்ந்து
உனது தாகம் கொண்ட இலைகளின்
சலசலப்பினை நான்
விரசமின்றிக் கேட்கின்றேன் எனக்குள்….
இதழ்கள் ஒவ்வொன்றாகக்
கீழே விழுகின்றன…
இதழ் கள்
ஊறுகின்றது…
இதழ்களாக
இதழ்களோடு
இதழ்களுக்குள்ளே!