சென்ரியூக்கள் 17

கல்விக் கடன்
வட்டியுடன் வசூலாகிறது
நோயாளிகளிடம்

¦
இரண்டு மாதத்துக்கு
ஒரு காதல் வாய்கிறது
நடிகைக்கு

¦
லட்சம் பேர் கொலை, கேட்டு
பார்த்து அழும் தாய்மார்கள்
தொலைக்காட்சியில் சீரியல்

¦
செய்தி வந்ததும்
தொலைக்காட்சி அணைப்பு
சமையல் நேரம்

¦
ரணங்கள்
துடிக்கிறது
புத்தாண்டு

எழுதியவர் : (25-Nov-15, 9:19 pm)
பார்வை : 69

மேலே