பரிசம் போட வர்றேன்

பெண்
அடை சோளப் பயிரைப்போல
அழகாத்தான் வளந்திருக்கேன்
மடப்பய மச்சானே
மலையிடச சொணங்குவது ஏன்

வெடக்கோழி இந்தப்புள்ள
விரத நாளு எதுமில்ல
தொடக்கூட தயங்குறியே
தூர நிண்ணு மயங்குறியே

ஆண்
வேலி ஒணாக்குட்டி
வேண்டாம் நீ ரொம்பச் சுட்டி
காதுக்குள்ள விட்டுக்கிட்டா
கடிக்காம விடமாட்டே

மாராப்ப நழுவ விட்டு
மனசுல மொளகாய நீ அரைப்ப
யாராச்சும் பாத்துப்புட்டா
ஊருக்குள்ள வழக்கு வெப்பே

பெண்
மஞ்ச நூலப்போடு
மனசார ஏத்துக்கிறேன்
முந்தி சொங்குல தான்
உன் நெஞ்ச கோத்துக்கிறேன்

ஆத்தோரம் நாணப்புதரு
காத்தாடத் தானிருக்கு
ஆள் பாத்து நானும் வர்றேன்
தோள் தொட்டு பேசிடலாம்

ஆண்
சென்மச்சனி போலத்தான்
ஏன் சீவன்ல வந்துப்புட்ட
வம்புல மாட்டிக்கிட்டேன்
வதைக்காம விடமாட்டே

ஆத்தாள கேட்டுப்புட்டு
அப்புறமா நானுஞ் சொல்றேன்
பங்குனி போன பின்னே
பரிசம்போட நானேவர்றேன்

எழுதியவர் : (26-Nov-15, 1:54 pm)
பார்வை : 104

மேலே