மாவீரர் தினம்

மாவீரர் தினத்தன்று எனக்கு மகன் பிறந்தான் – அந்த
மாவீரன் பிரபாகரனே மறுப்பிறவி எடுத்ததாய் நான் மகிழந்தேன்
புலித்தலைவன் என்று பெயரிடவே எண்ணம் கொண்டேன் - ஆனால்
கிலிப்பிடித்த சமூகம் கேலி செய்யுமே என்ன செய்வேன்…!

பள்ளிப் பருவத்திலிருந்தே பிரபாகரன்மீது கொள்ளை ஆசை
முள்ளிவாய்க்கால் சென்று சண்டையிட தனியாத வேட்கை
எல்லைத்தாண்டிப்போய் சண்டையிட்ட பெருங்குற்றத்தில்-என்னை
உள்ளேத்தள்ளியிருக்கும் கருணையற்ற தேச பாதுகாப்புச்சட்டம்!

கொத்து கொத்தாய் செத்துமடிந்த ஈழத்தமிழர்கள்
செத்தப் பிணங்கள்மேல் குதித்தாடிய ஈழ இராணுவீரர்கள்
சொத்துக்களை இழந்த சோகங்களோடு முகாம்களில்
கொத்தடிமைகளாய் செத்துப்பிழைக்கும் தமிழ்ச் சொந்தங்கள் !

அமைதிப்படையை அனுப்பினார்கள் அன்றைய ஆட்சியாளர்கள்
அமைதிக்குபதில் ஆடைஅவிழ்ப்பில் இறங்கின அமைதிப்படைகள்
அமைதிப்படையில் ஒருவர்கூட தமிழர்களுக்கு உதவவில்லை-என
அமைதிப்படை திரும்பியபோது வரவேற்க - அன்றைய மாணமுள்ள முதலமைச்சர் செல்லவில்லை..!

வடஇந்தியனுக்கு ஒன்றென்றால் பாராளுமன்றமே பதறுகின்றது
தென்இந்தியனுக்கு ஒன்றென்றால் கரம்கொட்டிச் சிரிக்கின்றது
ஆறுகோடி தமிழர்கள் வாழுகின்ற நாட்டிலே – ஈழத்தமிழரை காக்க
ஊருகூடித் தேரிழுக்க மறுப்பதென்ன ஒரே மூச்சில்? – தமிழ்நாட்டில்!

பாலசந்திரனை துளைத்தெடுத்த துப்பாக்கித் தோட்டாக்கள்
பாலகன் என்றும் பாராமல் பழிதீர்த்த சிங்கள பூதங்கள்..!
வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரத்தை நடுக்காட்டில் காயடித்த
ஈனப்பிறவி சிங்களரின் இறுமாப்பை இந்தியாவே சாக அடி..!

மீனவர்சமூதாயம் தொழிலுக்காக கடலுக்குச் சென்றாலே
சிங்களப்படைகள் சிறைப்பிடித்து சித்திரவதை செய்கின்றதே!
கடிதம் எழுதியெழுதி தன் கையாளாகத்தனத்தை காட்டுகின்ற
அடுத்தடுத்த ஆட்சியாளர்களின் தொடர்கதைகள் தொடர்கின்றதே!

மாவீரர் தினத்தன்று மன்றாடிக் கேட்கின்றேன்
மானமுள்ள ஐநாவே! கொடு – இலங்கைக்கு நெருக்கடி!
சாகட்டும் தமிழனென்று சபிக்கின்ற இந்தியாவே!
ஆகட்டும் பார்க்கலாம், நாளை என்தமிழே உனக்கு பதிலடி!

எழுதியவர் : இரா.மணிமாறன் (30-Nov-15, 10:38 pm)
பார்வை : 174

மேலே