இளவரசி
வர்ண ஜாலத்தில் வரைந்த
வண்ண நிலவோ
புரட்டிப் போட்ட புன்னகை
ஆம்ஸ்ரோங் அடி வைத்த சுவடோ
வீச்சு விழிகள்
கதிரவன் தொட்டுச் சிலிர்த்த சுடரோ
அதறும் அதரங்கள்
பொன் தகட்டின் விம்ப நிழலோ
குவிந்த இதழ்கள்
கொவ்வைப்பழ மேலுடலோ
எந்த ஏழைத் தந்தைகளுக்கும்
இளவரசியோ
குடிலையே குவலயமாக்கும்
மகராசியோ...
- பிரியத்தமிழ் -