nallor natpu

என் தோழர்கள் நல்லவர்கள்
நாலும் தெரிந்த நல்ல அறிஞர்கள்
நேருக்கு நேராய் பேசும் உத்தமர்கள்
உலகை அறிந்த ஒழுக்க சீலர்கள்...

ஏனோ தெரியவில்லை
சில நேரங்களில் சில உரசல்கள்...
ஆனால் உடனுக்குடனே சரியாகும்
நட்பினில் விரிசல் இல்லை...

கலையோடு கைவண்ணமும் சேர்த்து
கல்லையும் கரைக்க வைக்கும்
கலைக்கூடங்களின் நட்பு
என்றென்றும் நீடிக்க வாழ்த்துங்கள்...

தோல்வி இல்லை எங்களுக்கு
தோழமையைக் கொண்டாடுவதால்...
நட்பினிலே ஒரே பார்வை கொண்டு
நன்றாய் வாழ்வோம் என்னாளுமே ...






எழுதியவர் : shruthi (10-Jun-11, 12:00 am)
பார்வை : 436

மேலே